வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 24 லட்சம் மோசடி

0 20
Stalin trichy visit

திருச்சி,ஆக.6  திருச்சி மன்னார்புரம் தெற்குதெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 48). இவரிடம் கடந்த ஜூலை 18-ந்தேதி சையது முகமது இம்ரான் என்பவர் செல்போனில் வாட்ஸ் அப்பில்தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அத்துடன் இதற்காக, பணி நியமன ஆணை, விசா, விமான டிக்கெட், பாதுகாப்பு வைப்புத்தொகை, பயிற்சி கட்டணம், ஐக்கிய அரபு அமீரக பொறியியல் கவுன்சிலர் உறுப்பினர் கட்டணம், சான்றொப்பம், அடையாள அட்டை, தடையில் லாச்சான்று மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றுக்காக என்று கூறி அந்த நபர் பல தவணைகளில் பணம் கேட்டார். அவரது வார்த்தைகளை நம்பிய முரளிதரன், கடந்த ஜூன் 18-ந்தேதி முதல் கடந்த 24-ந்தேதி வரை பல தவணைகளில் வங்கி பரி வர்த்தனை மூலம் அந்த நபருக்கு ரூ.24 லட்சம் வழங்கினார். இருந்தும் அவர் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருக்கவே, முரளிதன் சந்தேகம் அடைந்து, அந்த நபர் கொடுத்த விசா, விமான டிக்கெட் மற்றும் பணி நியமன ஆணையை சரிபார்த்தபோது, அவை போலியானவை என்று தெரியவரவே, அந்த மர்ம ஆசாமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அப்போதுதான், முரளிதரனுக்கு அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் முர ளிதரன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.