108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

0 404
Stalin trichy visit

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். பொது செயலாளர்கள் ஆனந்தன், ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தொழிலாளர் ஆணையர் ஒப்புதல் பெற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு நிலையாணை விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் சட்டப்படியான விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கோவை மண்டல குழு உறுப்பினர் உறுதிமொழி வாசித்தார். இதில் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.