சமயபுரம் கடை வீதியில் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டி

0 641
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சமயபுரம் கடை வீதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையறிந்த அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவரா? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.