செல்போன் பறிக்க முயற்சி: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திருச்சி, ஆக.7 திருச்சி அரியமங்கலம் பகு தியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (வயது 54). சம்பவத் தன்று இவர் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட் டார் சைக்கிளில் அதே பகு தியை சேர்ந்த சபரிநாதன் (22), ராஜ்குமார் (24). மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வந்தனர். அவர்கள் திடீரென சாதிக் பாட்ஷாவின் செல் போனை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப் பிக்க முயன்றனர். ஆனால் உடனடியாக சூதாரித்துக் கொண்ட சாதிக் பாட்ஷா 3 பேரையும் பொதுமக்களின் உதவியுடன் கையும்,களவு மாக பிடித்து அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தார். இதுகுறித்து வழக் குப்பதிவு செய்த போலீசார் சபரிநாதன், ராஜ்குமார் ஆகி யோரை கைது செய்தனர். இந்த திருட்டில் ஈடுபட முயன்ற சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.