திருச்சி- திண்டுக்கல் சாலையில் விபத்துக்கள் அதிகரிப்பு

0 10
Stalin trichy visit

கடந்த 6 மாதங்களில் திருச்சி- திண்டுக்கல் சாலையில் நடந்த 200 விபத்துகள்
15 பேர் சாவு-விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங் கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுஓராண்டுக்கு மேலாகியும் திருச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் இன் னும் குறைந்தபாடில்லை. மேலும் பஞ்சப்பூரில் இருந்து மத்திய பஸ் நிலையம் நோக்கி வரும் பஸ்கள், இருசக்கர மற் றும் நான்கு சக்கர வாகனங்க ளால் அரிஸ்டோ மேம்பாலத் தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் புதிய மேம்பாலம் கட்டுமான பணி இன்னும் முடிவடையாததால் அரிஸ்டோமேம்பாலம் இருவ ழிப்பாதையாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த சாலை வழியாக திண்டுக்கல், தேனி, பழனி, போடி, கம்பம், குமுளி போன்ற பகுதிகளுக்கு பஸ்கள், கார்கள், போன்ற வாகனங்கள் செல்கின்றன.

இந்த சாலையில் வாகனங் கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் அவ்வ போது ஏற்பட்டு வருகிறது. மேலும், மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக இறங் கும் வாகனங்கள், சாலை நடுவே பலஇடங்களில் உள்ள சென்டர் மீடியன் இடைவெ ளிகள் வழியாக கவனக்குறை வாகக் குறுக்கே செல்லும் இரு சக்கர வாகனங்கள் மீது கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மோதுவதால் அடிக்கடி விபத் துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து தெற்கு போக் குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் கூறியதாவது:-தஞ்
சாவூர், புதுக்கோட்டை மற் றும் மதுரை தேசிய நெடுஞ்சா லைகளில் குறைந்த அளவி லான விபத்துகளே பதிவாகி வருகின்றன. ஆனால், திருச்சி-திண்டுக்கல் சாலையில் மட் டும் தினமும் சாலை விபத்து கள் ஏற்படுகின்றன. சில வாகன ஓட்டிகள் போக்குவ ரத்து விதிகளை பொருட்படுத் தாமலும், கவனக்குறைவாக வும், மதுபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும் செல்வதாலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். பலர் படுகாயமடைந்து அவ திக்குள்ளாகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் மட் டும் இச்சாலையில் சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன. இதில் சுமார் 20 பேர் உயிரிழந் துள்ளனர். 50-க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்துள்ள னர். இச்சாலையில் தொடரும் விபத்துகளுக்கு அதிகப்படி யான வளைவுகள் மற்றும் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறுவதுமே முக்கிய காரணமாக உள்ளது. இவ் வாறு அவர்கள் கூறினர். பாத சாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்களை அச் சமடைய செய்யும் இது போன்ற விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் போலீசா ருடன் இணைந்து நடவ டிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.