திருச்சி ஜங்ஷன் புதிய பாலத்தில் வில் வடிவ இரும்பு தடுப்பை நகர்த்தும் பணிகள் தொடக்கம்
திருச்சி, ஆக.7 திருச்சி ஜங்ஷன் ரெயில்வே புதிய பாலத்தில் வில் வடிவ இரும்பு தடுப்புக் கட்டுமானத்தை நகர்த்தும் பணிகள் தொடங்கியது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே இருந்து பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பாலத்தின் மேற்பகுதியில் வில் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கட்டுமானத்தை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பக்கவாட்டு தடுப்புகள் வில் வடிவத்தில் இருக்கும் வகையில், அதன் அருகிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வில் வடிவ இரும்பு தடுப்புக் கட்டுமானத்தைத் தாங்குவதற்காக சுமார் 100 அடி உயரம் உள்ள ராட்சத கிரேன் வர வழைக்கப்பட்டுள்ளது.
இதனை நகர்த்துவதற்காக தண்டவாளங்களுக்கு இடையே இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வில்வடி இரும்பு தடுப்பு கட்மானத்தை நகரத்தும் பணி பணிகள் தொடங்கி நடைபெற்று வரு கிறது.