404 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

0 109
Stalin trichy visit

திருச்சி, ஆக. 13 திருச்சி மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15 அன்று கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.

கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (2025-26-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விபரம்), தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தொழிலாளர் வரவு-செலவு அறிக்கை குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-, சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஐல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணியளவில் திருச்சி மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.