சிறுகனூர் அருகே வாலிபரிடம் இருசக்கர வாகனம், செல்போன் பறிப்பு : 3 பேர் கைது

0 22
Stalin trichy visit

திருச்சி, ஆக.17  சிறுகனூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வாலிபரிடம் மோட்டார் சைக்கிள்-செல்போனை பறித்த 3 பேர் கைது

மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபரிடம், சமூக வலைத்தளத்தில் கிரைண்டர் என்ற செயலி மூலம் சிலர் பழகி வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் சம்பவத்தன்று அந்த வாலிபரை ஓரினச் சேர்க்கைக்காக சிறுகனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு வருமாறு 3 பேர் அழைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற, அந்த வாலிபரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை அவர்கள் பறித்து கொண்டு, அவரை மிரட்டி விட்டுசென்றதாக கூறப்படுகிறது.

அந்த வாலிபர் இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த 3 பேரும் தா.பேட்டை பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சத்தியபிரியா தலை மையில் போலீசார் அங்கு சென்று, இந்த சம்பவத்தில் ஈடு பட்ட நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகே உள்ள சந் தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தகோபால் மகன் லோகேஸ்வ ரன் (வயது 21), முசிறி அருகே உள்ள மகாதேவி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சந்திரசேகரன் (24), லால்குடி அருகே உள்ள கூகூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் முத்துவேல் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்திநேற்று சிறையில் அடைத்த னர்.

Leave A Reply

Your email address will not be published.