திருச்சியை சேர்ந்த வணிகவரித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

0 19
Stalin trichy visit

திருச்சி, ஆக.19 திருச்சியை சேர்ந்த  வணிகவரித்துறை அதிகாரி தற்கொலை
பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர், திருப்பூர் குமார்நகரில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில நிலவரி அலுவலராக பணியாற்றி வந்தார். பணிநிமித்தமாக, திருப்பூர் –  செட்டிபாளையம் ரேஷன் கடை வீதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருடைய மனைவிஜெக தீஸ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீரங் கத்தில் வசித்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் சுரேஷ் ஸ்ரீரங்கத்துக்கு  வந்து குடும்பத்தாரை  பார்த்து வருவது வழக் கம்.

இந்த நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை இருந்ததால் அவர் ஸ்ரீரங் கத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படு கிறது. ஆனால், சனிக்கிழமை சுரேஷ், தனது செல்போனில் அவருடைய மனைவி ஜெகதீஸ்வரியிடம் பேசினார்.
இதையடுத்து மறுநாள் காலை அவருடைய மனைவி சுரேசை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. பலமுறை அழைத்தும் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த ஜெகதீஸ்வரி உடனடியாக சுரேஷ் உடன் பணியாற்றும் ஒரு ஊழியரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கணவர் சுரேஷ் போனை எடுக்க வில்லை என்றும், எனவே அவர் தங்கியிருக்கும் வீட் டுக்கு சென்று பார்க்கும்படி
யும் கூறினார்.

இதையடுத்து அந்த ஊழியா நேரடியாக சுரேஷ் தங்கி வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பட்டப்பட்டிருந்தது. பல முறை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை.
இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.  அப்போது, அங்கு மின்விசிறியில் சுரேஷ் தூக் கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக வேலம்பாளையம்  காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சுரேசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கள், ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல், பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட் டது. பணிச்சுமை காரணமாக சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை கார ணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.