குப்பை கொட்டும் இடமாக மாறிய கட்டளை வாய்க்கால்
திருச்சி, ஆக.21-திருச்சி உடையான்பட்டி பகுதியில் கட்டளை வாய்க்கால் உள்ளது. முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து இந்த வாய்க் காலுக்கு தண்ணீர் வந்து சாத்தனூர் குளம் மற்றும் பாசனத் திற்கு செல்கிறது. இந்த நீரை சாத்தனூர், உடையான்பட்டி, திருக்கட்டளை உள்பட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, தண்ணீர் இல்லாததால் இந்த வாய்க்கால் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள் ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அங்குள்ள குப்பை களை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.