திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பழைய காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

0 15
Stalin trichy visit

திருச்சி, ஆக. 20 திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
காவிரி பழைய பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம் அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டம்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வில் உள்ள காவிரி பழைய பாலத்தை சீர மைக்கும் பணி இரவு-பகல் என தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் பணியை நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட் டுள்ளனர்.

காவிரி பழைய பாலம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பழைய பாலம் கடந்த 1957-ம் ஆண்டு கட்ட தொடங்கி 1963-ம் ஆண்டு பணிகள் முடிந்து திறக்கப்பட் டது. இந்தபாலத்தின் மொத்த நீளம் 630 மீட்டர் ஆகும்.

14 தாங்குதூண்கள் (பியர்ஸ்) மற்றும் 15 இடைவெளி கிடை மட்ட அமைப்புகளுடன் (ஸ்பேன்) இந்த பாலம் அமைக்கப்பட்டது. திருச்சி-சென்னையை தரைவழியாக நேரடியாக இணைக்கும் இந்த சாலையில் நடைபெறும். அதிக போக்குவரத்து கார ணமாக அவ்வப்போது பாலத்தை பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற பழுது பார்ப்பு பணி களை தொடர்ந்து 16 ஆண்டுக ளுக்கு பின்னர் மீண்டும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த பாலம் கடந்த ஜூன் அருகில் உள்ள புதிய காவிரி மாதம் 25-ந்தேதி மூடப்பட் டது. இதன் காரணமாக பாலம் வழி யாக ஒட்டுமொத்த போக்கு வரத்தும் இருவழிப்பாதை யாக திருப்பி விடப்பட்டுள்ளது. பாலத்தை தாங்கி திற்கும் தூண்களில் உள்ள 120 பழுத டைந்த பேரிங்குகளை மாற் றுவது, பாலத்தின்விரிவாக்க இணைப்புகளில் உள்ள ‘ட்ரிப் சீல் எக்ஸ்பான்ஷன் ஜாய்ண்டு’களை சீரமைப் பது, மேல் பகுதியில் உள்ள குழிகளை தார்ப்பூச்சு மூலம் அடைப்பது, பாதசாரிகளுக் கான பாதுகாப்பு இரும்பு தடுப்புகளை பலப்படுத்துவது ஆகியவை இந்த பணி யின் முக்கிய அம்சங்கள் ஆகும். காவிரி ஆறு தற்போது நீரோட்டம் டம் இல்லாமல் வறண்ட நிலையில் உள்ளதால் பாலத்தின் கீழ் பகுதி யில் நுட்பமான பணிகள் துரிதமாக நடைபெற்று வரு கிறது. இந்த பணிகளில் அதற்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டார அதிகா ரிகள் கூறுகையில், காவிரி பழைய பாலம் சீரமைப்பு பணிகளில் சுமார் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. திட்ட மிட்டப்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) இறுதிக்குள் சீரமைப்பு பணிகள் முழு மையடையும் வகையில் தீவிரமாக நடந்து வருகிறது. என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.