திருச்சியின் கூவம் ஆறாக மாறிய உய்யக்கொண்டான் வாய்க்கால் : நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருச்சி, ஆக.21 திருச்சியின் கூவம் ஆறாக மாறிய உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உய்யகொண்டான் வாய்க்கால் காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்றான உய்ய கொண்டான், குளித்தலை அருகே பெட்டவாய்த்தலை யில் இருந்து பிரிந்து திருச்சி மாநகருக்குள் சுமார் 16 கி.மீ. தூரத்திற்கு பாய்ந்து இறுதியாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே புதலூரில் தனது நீரோட்டத்தை நிறுத்துகிறது.
மாமன்னர் ராஜ ராஜ சோழனால் வெட்டப்பட்ட இந்த வாயக்கால் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது. உய்ய கொண்டான் வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பாசனம் நடைபெறுகிறது. மேலும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தெளிந்த நீரோடையாக இருந்த உய்யகொண்டான், தற்போது நகர வளர்ச்சி மற் றும் கழிவுநீர் கலப்பின் கார ணமாக சாக்கடையாக மாறி விட்டது. திருச்சி நகரின் பல இடங்களில் உய்யகொண்டான் வாய்க்காலில் வீட்டுக்க ழிவுகள். மருத்துவ கழிவுகள், ஓட்டல் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளும் கலக்கின்றன.
தொட்டிப்பாலம், திருச்சி கோர்ட்டு, தென்னூர் அண் ணாநகர், பாலக்கரை, வரக
னேரி பகுதிகளில் உய்யக்கொண்டான் வாய்க்கால் மேல் பகுதியில் ஆகாய தாமரை படர்ந்து காணப்படு கிறது. தற்போது வாய்க்காலில் நீரோட்டம் இல்லை என்றாலும் தேங்கி நிற்கும் கழிவுநீர், சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி அரியமங்கலம் காட்டூர் பாப்பாக்குறிச்சிக்கு செல் லும் வழியில் உய்யகொண் டான் வாய்க்காலை கடக்க பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் உடைந்த ஹெல் மெட்கள். சூட்கேசுகள் பைகள், மது பாட்டில்கள். பழைய துணிகள், செருப்பு கள், பராமரிக்க முடியாத வீட்டு உபயோக பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பாலத்தில் இருந்து அவை தூக்கி எறியப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
தண்ணீர் இல்லாமல் இருக்கும் உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர்வாரி, கழிவுப்பொருட்களை அகற்றுவதுடன், மீண்டும் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.