தொழில்நுட்ப கோளாறு : திருச்சியில் 1 மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்

0 23
Stalin trichy visit

திருச்சி, ஆக. 22திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.43 மணி அளவில் 126 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சிறிதுதூரம் சென்றநிலையில் தொழில்நுட்பகோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து விமானிஉடனடியாக திருச்சிவிமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு கட்டுப்பாட்டு அறைமூலம் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் திருச்சி விமான நிலையத்தில் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் மீட்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். அதன்பின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங் கியதும் சுமார் 1 மணி நேரம் வானில் வட்டமடித்தது. விமானம் தொடர்ந்து வானில் வட்டமடித்ததால் பயணிகள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அச்சம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து விமானம் இரவு 9.02 மணி அளவில் திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பின் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட னர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத் தியது. இதற்கிடையே தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் இதே விமானத்தில் பயணிகளை அனுப்பி வைப்பதா? அல்லது மாற்று விமானம் மூலம் பயணிகளை அனுப்பி வைப்பதா? என்பது குறித்து விமான நிறுவனத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.