சென்னையில் பெரிய விமான கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் – துரை வைகோ

0 13
Stalin trichy visit

திருச்சி. ஆக.25 சென்னையில் பெரிய விமான கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் கால தாமதத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களே முக்கியக் காரணம் – துரை வைகோ

திருச்சி மாநகரில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்: அனைத்து மேம்பாலங்களும் குறித்த காலத்தில் திறக்கப்படும் ஆய்வுக்கு பின் துரை வைகோ பேட்டி

திருச்சி மாநகரில் பொதுமக்களின் நீண்டகாலப் பயன்பாட்டிற்காக நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாலப் பணிகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ துறைசார்ந்த அதிகாரிகள் நேரடியாகப் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:

சென்னை – திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 1963-ல் கட்டப்பட்ட இப்பாலம் பழுதடைந்ததால், கடந்த ஜூன் மாதம் முதல் மூன்று ஷிப்டுகளில் இரவும் பகலும் தீவிர பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்புதுப்பிக்கும் பணிகள் திட்டமிட்டபடி அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.

டவுன் ஸ்டேஷன் ரயில்வே மேம்பாலம் நில கையகப்படுத்தல் மற்றும் ரயில்வே, மின்சாரம், நெடுஞ்சாலை உள்ளிட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைப்புச் சிக்கல்களால் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், தற்போது அனைத்துச் சவால்களும் சரிசெய்யப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பாலம் வரும் 2027 ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும்.

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய பாலம் முழுமையாக அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஒரு மாத கால சிறிய தாமதத்துடன், 2027 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்.

மாரிஸ் மேம்பாலம் ஒப்பந்தக்காரரின் தொய்வு மற்றும் சில காலதாமதங்களைத் தொடர்ந்து, ரயில்வே துறை அமைச்சரின் கவனத்திற்குொண்டு செல்லப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ரயில்வே பகுதிகள் செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்குள்ளும், மாநகராட்சி அணுகுசாலைப் பணிகள் அக்டோபர் இறுதிக்குள்ளும் முடிக்கப்பட்டு, நவம்பர் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படும்.

அரிஸ்டோ மேம்பாலம்கடந்த 2024 மார்ச்சில் தொடங்கப்பட்ட இப்பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி ரயில்வே மற்றும் அணுகுசாலை இணைப்புகள் முடிக்கப்பட்டு, டிசம்பர் 2026 அல்லது 2027 ஜனவரி மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
மேலும், பொன்மலை ஜி கார்னர் மேம்பாலத்திற்குத் தேவையான என்.ஓ.சி (NOC) மற்றும் 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுவிட்டதாகவும், ஒரு சில சிறு இடப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டவுடன் டெண்டர் கோரப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சஞ்சீவி நகர், ஒய் ஜங்ஷன், மாரிதி நகர் ஆகிய மூன்று இடங்களில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் வாகன வழி சுரங்கப்பாதை அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

பறந்தூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு?

சென்னை விமான நிலையம் பின்தங்கிவிட்டதாகவும், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு இணையாக சென்னைக்கு அருகில் அடுத்த 50-60 ஆண்டுகால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு நவீன புதிய விமான நிலையம் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை முழுமையாக 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றாலும், சுமார் 70 முதல் 80% வரை நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் விவசாய நிலங்களும், சுமார் 13 ஏரிகளும் இருப்பதால் அப்பகுதி மக்கள் தரப்பிலிருந்து கணிசமான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஐதராபாத் மற்றும் பெங்களூர் விமான நிலையங்கள் போல 15 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கும் தகுந்த இடத்தில் இது போன்ற பெரிய திட்டம் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும், கடந்த கால ஆட்சியாளர்களின் தாமதமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.