திருச்சியில் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமான 5 பாலங்கள் பணி: துரை வைகோ எம்.பி. ஆய்வு

0 23
Stalin trichy visit

திருச்சி, ஆக.26 துரை வைகோ எம்.பி. ஆய்வு திருச்சி நகரில் கோட்டை ரெயில் நிலையம் ‘அருகில் மாரீஸ் மேம்பாலம், ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகில் அரிஸ்டோ மேம்பாலம், டவுன் ரெயில் நிலையம் அருகில் பாலம் மற்றும் கோரையாறு பாலம் ஆகியவை கட்டப்பட்டுவருகிறது.

மேலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பழைய பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் மாதம் இறுதியில் மூடப்பட்டது. ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வரும் 4 பாலங்கள் மற்றும் காவிரி பாலம் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி நகரில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மக்கள் அன்றாடம் பலதொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில்துரை வைகோ எம்.பி. நேற்று 4 புதிய பாலங்கள் கட்டுமான பணிகளையும், காவிரி பாலம் பராமரிப்பு பணி யையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு முடி வில் திருபர்களுக்கு அளித்த பேட்டியில் பாலம் கட்டுமான பணி இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், மாரீஸ் மேம்பாலம் பணியானது வருகிற அக்டோபர் மாதத்திற்குள் முடிவடைந்து பயன்பாட் டிற்கு வரும் என்றும், டவுன்ஸ்டேசன் பாலம் பணி அடுத்த ஆண்டு ஆகஸ்டில் முடிவடையும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.