மணப்பாறை அருகே எருது ஓட்டத்தில் போட்டி போட்டு ஓடிய காளைகள்
திருச்சி, செப். 2 மணப்பாறையை அடுத்த கோடங்கி நாயக்கனூரில் உள்ள எருதுகுட்டை சாமி கோவிலில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி எனும் எருது ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 14 மந்தைகளில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் குறிப்பிட்ட தூரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஒரே நேரத்தில் விடப்பட்டது. அப்போது இலக்கை நோக்கி போட்டி போட்டுக்கொண்ட காளைகள் ஓடி வெற்றி பெற்றது. பின்னர் தேவாராட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.