பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் : பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

0 18
Stalin trichy visit

திருச்சி, செப்.17 மணப்பாறை அருகே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – தூய்மை பணியாளர்களுக்கு கவுரவப்படுத்தி இனிப்பு வழங்கிய பாஜகவினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சி பூங்குடிபட்டியில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்டம் மணப்பாறை வடக்கு ஒன்றிய தலைவர் சித்தாந்ததம் சுப்ரமணி தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டு ஒன்றிய பார்வையாளர் சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் அவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி, பொருளாளர் டி.ஆர்.எஸ் செந்தில்குமார், எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் ஜி.கே மணிகண்டன் பட்டியல் அணி மாவட்ட செயலாளர் பொறியாளர் சுரேஷ், கிளை தலைவர்கள் பால்ராஜ், மறவனுர் ரத்தினம், வெள்ளைச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.