குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் B.Tech. புதிய மாணவர்கள் சேர்க்கை – வரவேற்பு விழா

0 24
Stalin trichy visit

திருச்சி, செப்.17 குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் B.Tech. புதிய மாணவர்கள் சேர்க்கை மற்றும் வரவேற்பு விழா:

திருச்சி மாவட்டம், இலால்குடி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2026-ஆம் கல்வியாண்டிற்கான B.Tech. (வேளாண் பொறியியல்) புதிய மாணவர்கள் சேர்க்கை மற்றும் வரவேற்பு விழா 16.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள்,புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.​நிகழ்ச்சியின் தொடக்கமாக, பண்ணை இயந்திரங்கள் மற்றும் சக்தித் துறை (FMP) இணைப் பேராசிரியர் முனைவர் பி. காமராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முதன்மையர் முனைவர் ஆர். லலிதா தலைமையேற்று, புதிய மாணவர்களின் எதிர்காலம் சிறக்கத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

​இவ்விழாவில் சிறப்புரையாற்றிய கல்வி ஒருங்கிணைப்பாளர். முனைவர்.எஸ். ஏ. ரம்ஜானி, “மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், கட்டுப்பாடான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், கல்லூரியின் பல்வேறு கூடுதல் செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்பது அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது” என வலியுறுத்தினார்.

​நிகழ்ச்சியின் நிறைவாக, கணினி அறிவியல் துறை உதவி ஆசிரியர் திருமதி. ஜா. ஜனனிஷா நன்றியுரை ஆற்றினார். புதிய மாணவர்களின் கல்லூரி வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்த இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.