கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

0 11
Stalin trichy visit

திருச்சி, செப்.17   திருச்சி பிராட்டியூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறம் கஞ்சா விற்றதாக புங்கனூர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 48), ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக புங்கனூர் காடூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மனைவி ஜெயா (65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 3 3/4 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.