திருச்சியில் 25 மணி நேரம் இடைவிடாது கண்ணதாசன் பாடல்கள் ஒப்புவிக்கும் உலக சாதனை
திருச்சி செப். 19 கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருச்சி கிளை மற்றும் ஜமால் முகமது கல்லூரி முதுகலை தமிழாய்வுத்துறை இணைந்து கல்லூரி வளாகத்தில் கண்ணதாசனின் பாடல்கள் மற்றும் கவிதைகள் ஒப்புவிக்கும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
திருச்சியில் தொடர்ந்து 25 மணி நேரம் இடைவிடாது கல்லூரி மாணவ மாணவிகள் கண்ணதாசனின் பாடல்கள் மற்றும் கவிதைகளை எடுத்துக் கூறி சாதனை படைத்தனர்.
போட்டிக்கு கல்லூரி முதல்வர் ஜாகிர் ஹுசைன் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் ஜமால் முகமது பிலால், செயலர் காஜா நஜுமுதீன், பொருளாளர் ஜமால் முகமது, உதவி செயலர் அப்துல் சமது, இயக்குனர் அப்துல் காதர் நிஹால் ஆகியோர் வாழ்த்தினர். தமிழ் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் கிராஜுதீன் போட்டியை ஒருங்கிணைத்தார் ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.
போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் 380 பேர் தொடர்ந்து 25 மணி நேரம் கண்ணதாசனின் படைப்புகளை எடுத்துக் கூறினர் புதன்கிழமை காலை 10 10 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு வியாழக்கிழமை காலை 11:30 மணிக்கு நிறைவு பெற்றது. இடையில் 20 நிமிடம் மட்டும் இடைவேளை அனுமதிக்கப்பட்டது சாதனை புத்தக நிறுவனத்தின் மூத்த நடுவர் கே என் சக்திவேல் அதனை உலக சாதனையாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்
இதில் ரோட்டரி சங்கத்தின் ரொட்டேரியன் சுபா பிரபு, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் பிரசிடெண்ட் பி ராஜமோகன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை தலைவர் நிஷா, ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமன் சிட்டி மிட் டவுன் தலைவர் குரு, ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் அறிவழகன், கோவிந்தராஜு, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி லெஜென்ஸ் பிரியதர்ஷினி கருணாகரன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமன் சிட்டி எலைட் தலைவர்
முகமது ரியாஸ், ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸாஸ் தலைவர் ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் பா ரகுநாத் ,வே விக்னேஷ் போட்டியினை ஒருங்கிணைத்தனர். முன்னதாக கூடுதல் முதல்வரும் தமிழாய்வுத்துறை தலைவருமான எஸ் நாகூர் கனி வரவேற்றார்.