தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதன்மை விடுதியில் மாணவர்கள் அறிமுக விழா
திருச்சி, செப்.25 தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முதன்மை மாணவர் விடுதி இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அறிமுக விழா:-
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதன்மை மாணவர் விடுதி இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வணிகவியல் துறை, துணைக்காப்பாளர் ராம்ஜி வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வாசுதேவன் கலந்துகொண்டார் அவருக்கு பொன்னாடை போர்த்தி மலர் கொத்து வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி விடுதி மாணவர்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் இயற்பியல் துறை தலைவரும், முதன்மை மாணவர் விடுதி குழு உறுப்பினருமான சிவக்குமார், கணிதவியல் துறை பேராசிரியர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் இறுதியாக இளநிலை செயலாளர் சிவசங்கர் பாபா நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறை கௌரவ விரிவுரையாளர் ராஜா செய்திருந்தார்.
விழாவில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனைத்து துறை இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது