போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த பெண் போலீசை கத்தியால் குத்த முயன்ற வாலிபர்
திருச்சி, செப். 28 கல்லக்குடியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் போலீசை கத்தியால் குத்த முயன்ற வாலிபர்; பொதுமக்கள் மீட்டனர்
கல்லக்குடியில் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து பெண் போலீசை வாலிபர் கத்தியால் குத்த முயன்றார். அந்த வாலிபரிடம் இருந்து பெண் போலீசை பொதுமக்கள் மீட்டனர்.
இந்தச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. குடிபோதையில் வந்தார்திருச்சி மாவட்டம் கல்லக்குடி போலீசார் நேற்று முன் தினம் மாலை இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் குடிபோதையில் இருந்ததும், அவரிடம் நடத்திய விசாரணையில் கோவாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி கல்லக்குடி காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். மேலும் அபராதம் விதித்து, அதற்கான ரசீதையும் அந்த வாலிபரிடம் வழங்கியுள்ளனர்.
சஇந்நிலையில் இரவு 11.30 மணி அளவில் அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான ஒரு வாலிபர் கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்குவந்துள்ளார். அப்போது அங்கு இரவு நேர பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் மட்டுமே இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அந்த வாலிபர் பெண் போலீசிடம் தாக்குதலை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அத்துமீறி செய்து, பெண் போலீசை கத்தியால் குத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீஸ், போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். பொதுமக்கள் மீட்டனர்அப்போது அந்த வழியாக வந்த கல்லக்குடியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், பெண் போலீசிடம், நடந்த சம்பவம் பற்றி கேட்டுறிந்து, போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள வீட்டின் ஒரு அறையில் பெண் போலீசை இருக்க செய்துள்ளனர்.
அதேநேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்த தனது மோட்டார் சைக்கிளை அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டிச் சென்றார். இச்சம்பவம் கல்லக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.