காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

0 15
Stalin trichy visit

திருச்சி, செப். 28 முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள முருங்கைப் பேட்டையை சேர்ந்த வரதராஜனின் மகன் பார்த்தசாரதி (வயது 20). இவரது நண்பர், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் செல்வனின் மகன் ஹரிகோபு (28). இவர்கள் 2 பேரும் திருச்சியில் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் பார்த்தசாரதியும், ஹரிகோபுவும் முக்கொம்பு நடுக்கரை அருகே காவிரி ஆற்றுக்கு சென்று குளித்தனர். அப்போது அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வாத்தலை போலீசாருக்கும், தீயணைப்பு துறைையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபடுத்தினர். நீண்டநேர தேடுதலுக்கு பின்னர் பார்த்தசாரதியை பிணமாகதீயணைப்புத்துறையினர் மீட்டனர். பின்னர் இரவு நேரமானதால் ஹரிகோபுவை தேடும் பணி கைவிடப்பட்டது. இதனால் ஹரிகோபுவின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இன்று (திங்கட்கிழமை) மீண்டும்தேடுதல் பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.