உலக இருதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை சார்பில் மராத்தான் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

0 15
Stalin trichy visit

திருச்சி, செப். 28 உலக இருதய  தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை சார்பில் மராத்தான்; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

உலக இருதய  தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் இருதய ஆரோக்கியம்  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் 21 கி.மீ. தூர மராத்தானை திருச்சி காவேரி மருத்துவமனை செயல்பாட்டு இயக்குநர் அன்புச்செழியன், 10 கி.மீ. மராத்தானை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், 5 கி.மீ. ஓட்டத்தை திருச்சியாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.

விழாவில் திருச்சி மாவட்ட இணைஇயக்குனர் (சுகாதார பணிகள்) கோபிநாத், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வாராஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், காவேரி மருத்துவமனை இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாகும். திருச்சி, சென்னை, சேலம், ஓசூர், திருநெல்வேலி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் 12 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், பணியாளர்களை கொண்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.