மழைநீர் சேமிப்போம் – சமூகத்தைக் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 22
Stalin trichy visit

திருச்சி, செப்.30 பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள புனித ஆஞ்சலா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

26.09.2026 முதல் 02.10.2026 வரை நடைபெறும் இம்முகாமில் மாணவிகளுக்கு சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை உணவு, தூய்மை, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக 29.09.2026 மாலை 4 மணிக்கு “மழைநீர் சேமிப்போம் – சமூகத்தைக் காப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் ஆசிரியர்கள் ஜோஸ்லின் வித்யா, புஷ்பராணி தலைமையில்
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் கலந்து கொண்டு மழைநீர் சேமிப்பின் அவசியம், மழைநீரை நிலத்தடி நீராக மாற்றுவதற்கான வழிமுறைகள், நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் எதிர்கால தலைமுறைக்காக தண்ணீரை சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

மழைநீர் ஒவ்வொரு துளியும் இயற்கையின் வரப்பிரசாதம். அதை வீணாக்காமல் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியம் என்றும், “தண்ணீரை சேமிப்போம்; நீர்நிலைகளை பாதுகாப்போம்; எதிர்கால தலைமுறையை காப்போம்” என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.