குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு

0 17
Stalin trichy visit

திருச்சி, செப்.30  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையர் டாக்டர் R. லலிதா, தலைமை வகித்தார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் P. காமராஜ் வரவேற்புரையாற்றினார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் பிரபு கலந்து கொண்டு, தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். மேலும், முதலுதவி (First Aid), இதய-நுரையீரல் புத்துயிர்ப்பு (CPR) மற்றும் அவசரநிலைகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை உயிர்காக்கும் நடவடிக்கைகள் குறித்தும் செயல்விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
மேலும், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முறைகள், நீர்நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வெள்ளம் போன்ற நீர் தொடர்பான பேரிடர்களின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ விபத்து பாதுகாப்பு முறைகள், முதலுதவி, CPR மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நிறைவாக  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜ. ஜனனிஷா நன்றி கூறினார். இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.