குமுளூர் வேளாண் கல்லூரியில் ராகிங், போதைப்பொருள் – பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

0 24
Stalin trichy visit

திருச்சி, செப்.30 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கருத்தரங்க அரங்கில் “ராகிங், போதைப்பொருள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முனைவர் P. காமராஜ் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதன்மையர் முனைவர் R. லலிதா அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றி, கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பான, ஒழுக்கமான மற்றும் மரியாதையான சூழலைப் பேணுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர்ஏ. அகிலாண்டேஸ்வரி கலந்து கொண்டு, ராகிங் தடுப்பு, போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் சட்டப்பூர்வ மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக  J. ஜனனிஷா  நன்றி கூறினார். . இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே ராகிங், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.