தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக்.3 இந்திய ஜனநாயகத்தின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும், அரசியல் அழுத்தங்களுக்காக தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட S.I.R யை நீக்க வலியுறுத்தியும் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் K.தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி,மாவட்ட துணைத் தலைவர் Y. ரஹீம்,மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் M அப்சல் கான், மாவட்ட செயலாளர் சதாம் உசேன்,மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S. அப்துல் காதர் ( பாபு) ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்.மஜீத், young Democrats மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ரபீக் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் Er.முகமது சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இமாம்.R. ஹஸ்ஸான் பைஜி ஆகியோர் கலந்துக் கொண்டு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி கண்டன உரையாற்றினார்.
மேலும் மகஇக மாநில பொதுச் செயலாளர்கோவன் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு தொகுதி செயலாளர் KSA.ரியாஸ்,வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் மார்க்கெட்.ஷேக்,திருவெறும்பூர் தொகுதி தலைவர் I.ஷேக் முகமது ஆகியோர்கள் கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
இந்நிகழ்வை மாவட்ட துணைத் தலைவர் அப்பாஸ் தொகுத்து வழங்கினார்
இந்நிகழ்வில் கிழக்கு தொகுதி தலைவர் I.சபியுல்லா , செயலாளர் சுகைப்,
திருவெறும்பூர் தொகுதி தலைவர் I. ஷேக் முகமது,துணைத் தலைவர் கைருதீன்,மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா,பொருளாளர் ஷாஜகான்,மணப்பாறை தொகுதி தலைவர் உமர், செயலாளர் ராஜா முகமது,மகளிர் அணி மாவட்ட தலைவர் தாஜ் நிஷா,பொதுச் செயலாளர் தவுலத் நிஷா,SDTU மாவட்ட தலைவர் சக்கரை மீரான்,இணைச் செயலாளர் இலியாஸ், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக்,சுற்றுச் சூழல் அணி மாவட்ட தலைவர் ஹக்கீம்,Young Democrats மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பைசல், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அலி, தமீம் அன்சாரி, வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மசூதா மரியம்,உள்ளிட்ட நிர்வாகிகள்,தொகுதி கிளை,அணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
இறுதியாக கிழக்கு தொகுதி துணைத் தலைவர் இம்தியாஸ் நன்றி கூறினார்.