திருச்சியில் 424 புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்

0 12
Stalin trichy visit

திருச்சி, அக். 3 தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் 424 புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் நேற்று அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மகளிருக்கான கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, மகளிருக்குப் பெருமளவில் பயனளித்திடும் வகையில் வெற்றிப் பயணம் திட்டத்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை முதல்வர் ஜோசப் விஜய் சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து தொடங்கி வைத்தார். இதையடுத்து திருச்சியிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ் கலந்து கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், பேருந்தில் ஏறிய அமைச்சர், மகளிருக்கு பயணச்சீட்டை வழங்கினார்.

பின்னர், அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 11 கிளைகளின் மூலம் இயக்கப்படும் 642 பேருந்துகளில், 424 பேருந்துகள் வெற்றிப் பயணத்திட்டத்தில் இயக்கப்படும் என்று கூறினார்.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொதுமேலாளர் சதிஷ்குமார், துணை மேலாளர் (வணிகம்) சாமிநாதன், உதவி மேலாளர் (இயக்கம்) மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.