நேர்மையாக தான் இடைத்தேர்தலையும் சந்திக்கிறோம் : திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 15
Stalin trichy visit

திருச்சி அக் 5 திருச்சி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் நித்யா வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் 242 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்து பேசினார் .

நிகழ்ச்சியில் கிறிஸ்டோபர் திலக் எம்பி ,எம்எல்ஏக்கள் விக்னேஷ் கதிரவன் , முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி, த.வெ.க கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்கா சௌகத்,விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்கே ராஜா,
ஜவஹர்லால் நேரு,எனர்ஜி அப்துல் ரகுமான்,வழக்கறிஞர் நியூ மேன்,வேதாத்திரி நகர் பாலு,
காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் , கோட்டத் தலைவர்பிரியங்கா பட்டேல்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ரமேஷ்,நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் விஜய் செய்து வருகிறார். குறிப்பாக வெற்றிப் பயணம் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 2052 மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு வரை திருச்சி மாவட்டம் அந்த திட்டத்தில் முதலாவது இடத்தில் உள்ளது.
சட்டமன்ற தேர்தலின் போது த.வெ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆனால் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளோம் இடைத்தேர்தல் குறித்து ஒவ்வொருவரும் ஆருடம் கூறுவது போல் கூறி வருகிறார்கள்.
அனைத்து மக்களும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.
த.வெ.க வேட்பாளர் செல்லும் இடங்களில் எதிர்க்கட்சிகள், சிலரை தயார் செய்து எதிர்ப்பு தெரிவிக்க வைக்கிறார்கள். ஆனால் மக்கள் இடைதேர்தலில் த.வெ.கவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது தொடர்பாக சிபிஎம் செயலாளர் சண்முகம் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.
நாங்கள் பணம், ஜாதியை வைத்து தேர்தலில் நிற்கவில்லை மக்களை நம்பி தான் சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட்டோம். நேர்மையாக தான் இடைத்தேர்தலையும் சந்திக்கிறோம்.
நாங்கள் டிபன் பாக்ஸ், பணம் விநியோகம் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நேர்மையாக சந்திப்பதால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் நாங்கள் பிரச்சாரம் செய்வதை முடக்கினார். அதனால் எங்களால் அப்போது அதிக இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யும் முடிய வில்லை தற்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம் அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய எங்களால் முடிகிறது.

மக்களை முதல்வர் கிராமம் கிராமமாக சென்று சந்திக்கிறார்.
மக்களை சந்தித்தாலும் உங்களுக்கு பிரச்சினையாக உள்ளது சந்திக்காவிட்டாலும் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது என்றால் தவறு உங்களிடம் தான் உள்ளது.
வேறு கட்சியிலிருந்து த.வெ.கவில் இணைந்தவர்களுக்குள் ஏற்கனவே த.வெ.ககாவில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். தேவையில்லாத குழப்பங்களை யாரும் உருவாக்க வேண்டாம்
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.