62 பெண்களை ஏமாற்றியதாக தனியார் நிறுவன அதிகாரி மீது புகார்

0 14
Stalin trichy visit

திருச்சி, அக்.9  திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டையை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவன பெண் ஊழியர் ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றிய யுவராஜ் (40) என்பவர் அறிமுகமானார். அப்போது அவர் என்னிடம், தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார்.

பின்னர் அவர் என்னிடம் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கமும், ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை யும் பெற்றதோடு, எனது தனிமை வீடியோக்களையும் ரகசிய மாக பதிவு செய்துள்ளார். இதையடுத்து, யுவராஜின் செல்போனை பார்த்தபோது, என்னைப்போல் 61 பெண்களின் ஆபரச வீடியோக்கள் அதில் இருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, யுவராஜும் அவரது மனைவியும் சேர்ந்து பல பெண்களிடம் குடும்ப பிரச்சினை போல் நடித்து, மொத்தம் 91 பவுன் நகைகளும், ரூ.50 லட்சத்துக்கும் மேல் பணமும் மோசடி செய்து தெரியவந்தது.

மேலும், யுவராஜின் மனைவி போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் எனது ஆபாச வீடியோக்களை எனது உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டினர். இதையடுத்து, நான் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் பேரில் போலீசார் யுவராஜைக் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது மனைவியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், 62 பெண்களின் அந்தரங்கத் தரவுகள் உள்ள செல்போன் மற்றும் மடிக்கணினியைப் பறிமுதல் செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.