தலைமை தேர்தல் ஆணையரை பதவி விலக வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவ அமைப்பினர் கைது
திருச்சி, அக்.10 ஞானேஸ்குமாரை பதவி விலக வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவ – இளைஞர் அமைப்பினர் கைது
எஸ் ஐ ஆர் மூலம் இந்தியாவில் உள்ள ரூ.13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் ஞானேஷ்குமார் தான் எனவும் அவர் தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டி இந்தியா முழுவதும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இன்று அகில இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.