விதை சேமிப்பு கிடங்கை பார்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்

0 20
Stalin trichy visit

கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் கல்லன மாணவிகள் நீடாமங்கலத்தில் செயல்பட்டு வரும் விதைக் கிடங்கை (Seed Godown) நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் விதை சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நடைமுறை செயல்பாடுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டனர்.

பார்வையின்போது, விதைக் கிடங்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் மாணவர்கள் அப்பகுதியில் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான பயிர்கள் மற்றும் அவற்றிற்கான பரிந்துரைக்கப்படும் விதை ரகங்கள் குறித்து கேட்டறிந்தனர். குறிப்பாக நெல், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் தொடர்பான விதை ரகங்கள், பயிர் பருவங்கள் மற்றும் விதைத் தேர்வு முறைகள் குறித்து விளக்கம் பெறப்பட்டது.

நெல் பயிரைப் பொறுத்தவரை, குறுகிய கால ரகங்கள் கோடை/குறுகிய காலப் பருவங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், ADT 59 (110–115 நாட்கள்), ADT 57, ADT 51, ASD 21 மற்றும் ASD 16 போன்ற ரகங்கள் விவசாயிகளிடையே பயன்பாட்டில் உள்ளதாகவும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். மேலும், சம்பா மற்றும் தாளடி பருவங்களில் நீண்டகால ரகங்களான CR 1009 மற்றும் ADT 51 ஆகியவை பயன்படுத்தப்படுவதையும், நீர் கிடைக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப குறுகிய மற்றும் நடுத்தர கால ரகங்களைத் தேர்வு செய்வதையும் அறிந்தனர்.

நடப்பு ஆண்டில் விநியோகிக்கப்படும் நடுத்தர கால நெல் ரகங்களில் ADT 58, WGL 739 மற்றும் WGL 697 ஆகியவை நல்ல மகசூல் மற்றும் விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் Sornasapon, BPT, IR 20 மற்றும் சில JGL ரகங்களும் விவசாயிகளால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது. பாரம்பரியமான CR 1009, ASD தொடர் மற்றும் TPS போன்ற ரகங்களும் உள்ளூர் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப தொடர்ந்து பயிரிடப்படுகின்றன.

பயறு வகைகளில், உளுந்து (Black gram) முக்கியமான பயிராக இருப்பதாகவும், முன்பு ADT 5 அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது VBN 8, VBN 10 மற்றும் VBN 11 போன்ற ரகங்கள் பரவலாக ஊக்குவிக்கப்படுவதாகவும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். குறிப்பாக VBN 10 மஞ்சள் தேமல் நோய்க்கு (Yellow Mosaic) சிறந்த எதிர்ப்புத் திறன் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும், விதைகளின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் மாணவர்கள் தகவல்களைப் பெற்றனர். Foundation Seed (FS) மற்றும் Certified Seed (CS) ஆகியவற்றின் விலைகள் விதையின் தரத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. Improved White Ponni, Super-fine, Fine & Medium மற்றும் Coarse போன்ற தரப் பிரிவுகளுக்கு ஏற்ப கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளில் வேறுபாடு இருப்பதையும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர். பாரம்பரிய ரகங்களுக்குக் கூடுதல் கொள்முதல் மற்றும் விற்பனை விலை வழங்கப்படுவதாகவும் விளக்கப்பட்டது.

இந்த RAWE களப்பயணம், விதை உற்பத்தி முதல் சேமிப்பு, தரப்படுத்தல், சான்றளிப்பு, விலை நிர்ணயம் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் வரையிலான செயல்முறைகளை நேரடியாகப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. மேலும், விவசாயிகளின் தேவைக்கேற்ப தரமான விதைகளை சரியான பருவத்தில் கிடைக்கச் செய்வதில் விதைக் கிடங்குகளின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் நடைமுறை அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.