இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு
திருச்சி, அக்.28 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களை கல்லூரியின் தலைவர், செயலாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.