முதலமைச்சர் பசும்பொன் செல்லாததைப் பற்றி கூறி சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள் : அமைச்சர் ரமேஷ்
திருச்சி, அக்.30 முதலமைச்சர் பசும்பொன் செல்லாததைப் பற்றி கூறி சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள் : அமைச்சர் ரமேஷ் பேட்டி
திருச்சி அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், எல்லாத் தலைவர்கள் மீதும் அன்பும் பற்றும் மரியாதையும் கொண்டுள்ளவர் தமிழ்நாடு முதலமைச்சர். எங்கிருந்தாலும் அவர்களை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருபவர் முதல்வர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பசும்பொன் செல்லவில்லை எனக் கூறி சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். முத்துராமலிங்க தேவரின் பின்பற்றாதவர்கள் அனைவரும் இந்த ஆட்சியை புகழ்ந்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அவர் நிம்மதி இல்லை என கூறுகிறார் ஆனால் மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மக்கள் பணத்தை சுரண்டி அவர்களுக்கு என்ன தண்டனை பெற்று தர வேண்டுமோ அந்த தண்டனையை இந்த ஆட்சியில் பெற்றுத் தருவோம் அரசியல் காவல் புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்வது கிடையாது.
தவறு செய்தவர்கள் அதன் பலனை அனுபவித்தே தீருவார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை இந்த நான்கு மாதங்களில் ஏற்பட்டது கிடையாது கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட விதையையை நாங்கள் சரி செய்து வருகிறோம்.
விலைவாசியை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது