த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 20
Stalin trichy visit

திருச்சி, அக். 31 தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வினை கண்டித்து திருச்சியில் தி.முக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.வெ.க அரசைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் மாநிலும் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட மற்றும் கிழக்கு தொகுதி தி.மு.க மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநில செயலாளர் மேயர் மு.அன்பழகன், மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரிசி பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பன்மடங்கு பாதிக்கப்பட்டு வருவது குறித்து கண்டு கொள்ளாமல் வெறும் ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்தும் த.வெ.க அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி உள்ளது. போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. த.வெ.க. கட்சியினரே போதை பொருள் கடத்தலில் சிக்கி உள்ளனர். சிறையில் இருக்கும் கைதிகள் தப்பியோடுகின்றனர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய் திறக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மகளிரணி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.