மணப்பாறை அருகே 323 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது

0 46
Stalin trichy visit

திருச்சி, நவ. 14  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அடுத்த கரடிபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதனைத் தொடர்ந்து துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் ரகுமான் மற்றும் தனிப்படை பிரிவு காவலர்கள் கரடிப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது கரடிப்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி -45 என்பவரது வீட்டில் சுமார் 20 மூடைகளில் 323கிலோ அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது . மலையாண்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 323 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கையும் முடக்கினர் .

Leave A Reply

Your email address will not be published.