ஆறுமாதம் தேனிலவு காலத்திற்கு பிறகு வரக்கூடிய ஆட்சி சிறப்பானதாக இருக்கும் : அமைச்சர் ஷாஜகான பேட்டி
திருச்சி, நவ. 13 ஆறு மாதம் தேனிலவு காலத்திற்கு பிறகு வரக்கூடிய நாட்களிலே மிகச் சிறப்பான ஆட்சியாக சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஆட்சியாக, விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரும் ஆட்சியாக நிச்சயம் இந்த ஆட்சி இருக்கும் – அமைச்சர் ஷாஜகான் பேட்டி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் பள்ளிவாசல் புதிய கட்டுமானங்களை பார்வையிட்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், பின்னர் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில்,
இந்த ஆறு மாத ஆட்சி என்பது மக்கள் எதை விரும்பி மாற்றத்தை விரும்பி வாக்களித்தார்களோ அதை நிறைவேற்றக்கூடிய வகையிலே மிக சிறப்பான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்று சொன்னால் தமிழகத்தை கடந்த பல பத்தாண்டு காலமாக லஞ்சம் ஊழல் பிடியில் சிக்கி தவித்த மக்களுக்கு விடிவு தரக்கூடிய வகையிலே முதலமைச்சர் ஏதோ மேடை பேச்சுக்காக இல்லாமல் லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியை தருவதில் மிக உறுதியாக இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட சொன்னபோது லஞ்சம் ஊழலே வேண்டாம் என்பதையும் அதில் உறுதியாக இருப்பேன் என்றும் அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அதை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று சொன்னார்கள். அந்த வகையிலே வரலாற்றிலே முதன்முறையாக லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்று பிரகடனம் செய்யப்பட்டு அதை பின்பற்றப்படுகிறது. அதுவும் இந்த ஆறு மாத ஆட்சியிலே பல்வேறு நலத்திட்டங்களையும் குறிப்பாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி பயணம் திட்டம் போன்று பல்வேறு திட்டங்களையும் அமல்படுத்தி இருக்கிறார்கள். அதேபோல மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மாநாட்டிலும் தமிழகத்தினுடைய சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அது குறித்தான ஆய்வுக் கூட்டங்களும் நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். நடந்து முடிந்த நிதிநிலை கூட்டத்தொடரிலும் அனைத்து துறையின் சார்பிலும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் தற்போது வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அயலக கல்வி உதவி திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை என்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் ஸ்டாலின் குறித்த குற்றசாட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
அதாவது அந்த விண்ணப்பம் செய்வதற்கும், உயர் கல்வி வெளிநாடுகளை பொறுத்தவரைக்கும் செப்டம்பர்ல சில கோர்ஸ் ஆரம்பிப்பாங்க. டிசம்பர்ல சில கோர்ஸ் ஆரம்பிப்பாங்க. ஜனவரிலயும் சில கோர்ஸ் ஆரம்பிப்பாங்க. அந்த கோர்ஸ்ல சேர்றதுக்கு முன்னாடியே அந்த வழிமுறைகள் எல்லாம் எப்படி பின்பற்றணும்னு சொல்லப்பட்டிருக்கும். அந்த வழிமுறையை பின்பற்றி விண்ணப்பித்தவர்களுக்கு அந்த விண்ணப்பம் பரிசீலனை செய்யும்போது அவர்களுக்கு தேவைப்படக்கூடிய நிதி நிச்சயமாக இந்த அரசு கொடுக்கும். அதுல இந்த கல்விக்கு உதவித்தொகை வழங்குவதிலே இந்த சமூக நீதித் துறையின் சார்பில் மாத்திரமல்ல சிறுபான்மை நலத்துறையின் சார்பிலும் நிதி வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் அதற்கான தொகை வழங்கப்படும். கடந்த வருடம் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 10 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த வருடம் அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு பல விண்ணப்பங்கள் நீட்டிப்பு செய்த பிறகும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 15, 16 விண்ணப்பங்கள் தான். அது தகுதி படைத்த விண்ணப்பங்கள் ஏழு விண்ணப்பங்கள் மாத்திரம் பெறப்பட்ட காரணத்தால் மீண்டும் அதற்கான தேதியை தள்ளி வைத்திருக்கிறோம். ஆகவே வெளிநாடு சென்று பயிலக்கூடிய மாணவர்களுக்கு அவருடைய விண்ணப்பம் சரியாக இருக்கும்போது அவருக்கான உதவி நிச்சயமாக இந்த அரசு வழங்கும் என்றார்.
இந்த ஆட்சியை கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுக்களை அதிமுக பொது செயலாளர் வைத்துள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,
கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில சட்டம் ஒழுங்கு ஏதோ சரியாக பராமரிக்கப்பட்டது போலவும் அது குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின், கனிமொழி போன்றவர்கள் எல்லாம் இந்த அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடிய வகையில் பேசுகிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில இத்தனை கொலை நடந்திருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? 9000 கொலைகள் நடந்துச்சு. அதனால இங்க கொலை நடக்கும்னு நியாயப்படுத்தி பேச வரல. அது ஏதோ ஐந்து வருடமும் அமைதி பூங்காவாக இருந்தது போலவும் இந்த வருடம் தான் முதன்முறையாக கொலை நடந்தது போலவும் என்பது அரசியல் ரீதியான கால்புணர்ச்சி. முதலமைச்சரை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே காவல் துறையினுடைய உயர் அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியரை அழைத்து சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். வரக்கூடிய நாட்களில் அதை மீண்டும் கடுமைப்படுத்தக்கூடிய வகையிலே கடந்த இரண்டு மூன்று தினங்களாக ரவுடிகளை எல்லாம் பிடித்து கொண்டிருக்கிறார்கள்.
எம்எல்ஏக்கள் மேல வரக்கூடிய குற்றச்சாட்டு எம்எல்ஏக்கள் மீது சமூக வலைத்தளங்கள்ல தினம்தோறும் பல வகையான செய்தி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மீது உறுதியான குற்றச்சாட்டு கொடுக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டால் அந்த புகார்ல உண்மை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் உறுதியான நடவடிக்கையை எடுப்பார்கள். விலை ஏற்றம் குறித்த கேள்விக்கு,
இந்த வருஷம் பொறுத்தவரைக்கும் உலகளாவிய அளவில சூப்பர் எல்நினோ ஆண்டுன்னு சொல்லப்பட்டு பஞ்சமும், வறட்சியும், வெள்ளமும், புயலும் கோர தாண்டவம் ஆடும் என்று உலகளாவிய அளவில் சொல்லப்பட்டிருக்கு. கடந்த தென்மேற்கு பருவமழை மிக குறைந்த அளவிலே பொழியும் என்று சொன்னால் ரொம்ப மழை குறையும். இந்த வடகிழக்கு பருவ மழை அதிகமா பொழியும்னு சொன்னால் அதிகமா இருக்கும்னு வரக்கூடிய நாட்கள்னு சொல்றாங்க. அதுபோல வறட்சி அதிகமா இருக்கும்னு சொல்றாங்க. இது தமிழ்நாட்டுக்கு மாத்திரம் சொன்னது இல்ல. உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இருக்கு. இந்த விலையேற்றம்ங்கிறதும் இந்த பஞ்சம்ங்கறதும் வெளிநாடுகளிலும் இருக்கு. அது வெளி மாநிலங்களிலும் இருக்கு. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலே முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்து கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தீபாவளி கொண்டாடக்கூடிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ₹200 ரூபாய்க்கு உட்பட்டு இருக்கக்கூடிய அந்த காய்கறிகளை ₹100 ரூபாய் தொகுப்பிலே மக்களுக்கு திட்டத்தை கொண்டு தொகுப்பு வழங்கினார்கள். அதேபோல ₹300 கிட்டத்த வரக்கூடிய மளிகை பொருட்கள் ₹200 கொண்ட தொகுப்பு கொடுக்கறாங்கன்னா அது மக்கள் பாதிக்கப்படக்கூடாதுங்கிற அளவுக்கு அரசு இன்னும் முக்கியத்துவம் எடுத்துட்டு இருக்காங்க. அது மாத்திரமல்லாமல் ஆறு மாதம் ஒரு தேனிலவு காலம். இந்த ஆறு மாதத்திலே இத்தனை முன்னெடுப்புகள் எடுத்திருக்கக்கூடிய இந்த அரசு லஞ்சம் இல்லாத ஆட்சி என்று சொல்லப்படக்கூடிய அரசு. வரக்கூடிய நாட்களிலே மிகச் சிறப்பான ஆட்சியாக சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஆட்சியாக விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரும் ஆட்சியாக நிச்சயமாக இருக்கும் என்றார்.