கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியாளராகப் பதவி மாற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

0 44
Stalin trichy visit

திருச்சி, நவ. 23

14.3.2026 அன்று ஏற்படுத்தப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படியும், 2.11.2026 அன்று மின்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டபடியும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் கள உதவியாளராகப் பதவி மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ரெங்கராஜன், திட்டச் செயலாளர் பழனியாண்டி, நகரப் பொறுப்பாளர் ஜான் போஸ்கோ ரவி, மணப்பாறை கோட்டத் துணைத் தலைவர் ஜான் ஜோசப், ஸ்ரீரங்கம் கோட்டப் பொறுப்பாளர் எஸ்.கே. செல்வராஜ், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு பஷீர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதில் ஸ்ரீரங்கம் கேங்மேன் பொன்னுதுரை, மணப்பாறை கோட்டத் தலைவர் கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீரங்கம் கோட்டச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.