ரூ.50 லட்சம் மோசடிப் புகாரில் மெத்தனம் காட்டும் திருச்சி போலீஸ் : பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு

0 12
Stalin trichy visit

திருச்சி, நவ. 27  அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள் ரூ.50 லட்சம் மோசடிப் புகாரில் மெத்தனம் காட்டும் திருச்சி போலீஸ்

திருச்சி மாநகரம் கேகே நகர் அருகே உள்ள ராணி மெய்யம்மை நகரில் வசிப்பவர்கள் உமேஷ் – கஸ்தூரி தம்பதியினர். உமேஷ் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள படைக்கல தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். உமேஷ் மற்றும் கஸ்தூரி இருவரும் சேர்ந்து தங்களுடைய வீட்டை விற்பதாக கூறி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், பொதுமக்கள் என பலரை அணுகியுள்ளனர். அவர்களின் வீட்டை வாங்க சம்மதித்தவர்களிடமிருந்து முன்பணம் வாங்கியுள்ளனர்.

பணம் கொடுத்தவர்கள் அந்த வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி தர கூறும்போது அவர்கள் எந்த பதிலும் கூறாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது குறித்து விசாரித்த போது தான் இவர்கள் பலரிடம் ஒரே வீட்டை காட்டி ஏமாற்றி முன்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டை விற்பனை செய்யாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அவர்களை தொடர்பு கொண்டு தாங்கள் கொடுத்த முன் பணத்தை தருமாறு கேட்கும் போது எந்தவித பதிலும் கூறாமல் இருந்துள்ளனர். தொடர்ச்சியாக கேட்டால் பணத்தை கொடுத்தவர்கள் மீது புகார் அளிப்பதாகவும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். விரைந்து நடவடிக்கை இதுவரை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். உமேஷ் மற்றும் கஸ்தூரி ஆகியோரை அழைத்து விசாரணை செய்து அவர்கள் இருவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

உடனடியாக வீட்டை விற்க வேண்டும் எங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக தேவைப்படுகிறது என கூறியதால் தான் நாங்கள் முன்பணம் கொடுத்தோம் ஆனால் எங்களை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள்.

நாங்கள் கொடுத்த பணத்தை எங்களுக்கு காவல்துறையினர் பெற்று தர வேண்டும். பத்துக்கும் மேற்பட்டோரிடம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெற்றுள்ளனர். எங்களுக்கு தெரிந்த வகையில் மட்டும் சுமார் 50 லட்சம் வரை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதைத் தாண்டி அவர்கள் ஏமாற்றி உள்ள வாய்ப்புள்ளது அதையும் போலீசார் விசாரணை செய்ய வேண்டும். நாங்கள் கொடுத்த பணத்தை எங்களுக்கு பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பலமுறை பல காவல் நிலையங்களிலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.