மணப்பாறை அருகே சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

0 14
Stalin trichy visit

திருச்சி, நவ. 27  திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே மலம்பட்டியில் குடியிருப்பு அருகே இரவு சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பினை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப் பாம்பு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.