திருச்சி இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக திறப்பு விழா!

0 697
Stalin trichy visit

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள புனித பவுல் குருமடத்தில் இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கிராப்பட்டி வட்டார அதிபர் மற்றும் புனித தெரசா ஆலயம் பங்குத்தந்தை அருட்திரு J.J. லாரன்ஸ் தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை துவக்கி வைத்தார்.

பத்தாம் ஆண்டின் துவக்கமாக நடைபெறும் இவ்விழாவில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தலைவர் க. ரஞ்சித் குமார், செயலர் தா. ஜோசப் அமல்ராஜ், பொருளர் ஜோ. அற்புத சகாயராஜ், இணைச் செயலர் அ. அந்தோணி ஜெய்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நிறுவனத்தின் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.