சீராளம்மன் கோவில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய மர்மநபர்

0 466
Stalin trichy visit

திருவெறும்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சர்க்கார் பாளையம், சென்னை தேசிய நெடுஞ்சாலை சீராளம்மன்  கோவில் அருகே உள்ள மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தார்.
மேலும் இத்தகவலை அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலில் உள்ள கேணியில் ஒருவரை கொன்று விட்டு போட்டதாகவும், இதுபோல் ஏதேனும் மர்மநபர்கள் நிகழ்ந்திருக்கலாம் என கருதி, திருவெறும்பூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இவர் யார்? என்றும் இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.