மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் சார்பில் கிசான் கோஸ்தி- என்னும் உழவர் விழா

0 452
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணந்த வேளாண் வளாச்சி திட்ட கிராமமான கொல்லப்பட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் சார்பாக கிசான் கோஸ்தி- என்னும் உழவர் விழா நடைபெற்றது.

விழாவில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பதிய முயற்சிகளில் ஈடுப்பட்டு வேளாண் பயிர் சாகுபடியை சிறப்பாக அமைத்துக்கொண்டால் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கலாம் மின் இணைப்பு பெறுதல், விவசாய விளைப் பொருட்களுக்கான களம் அமைத்தல், சிறு சேமிப்பு கிடங்கு அமைத்தல், நீர் வரத்துகளை சீர் அமைத்தல் இலவச மரங்கன்றுகள் பெற்று பராமரிப்பு தொகையுடன் நடவு செய்தல் விளைப் பொருட்களுக்கான விற்பனை தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநர் ரவி தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். பயிர்காப்பீடு திட்ட அலுவலா் கார்த்திக் பிரதமரின் பயிர்காப்பீடு பற்றிய தகவல்களை கூறினார். வேளாண்மை அலுவலர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மனோகரன், செல்லப்பாண்டி, அட்மா அலுவலர்கள், அன்பழகன், சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.