சில்லறை வாங்குவது போல் நடித்து 1500 ரூபாய் கையாடல் செய்த நரிக்குறவ பெண்கள் 

0 379
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ் நிலையத்தில் வியாபாரி ஒருவர் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு துறையூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண்கள் இருவர் கையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு தனக்கு சில்லறை வேண்டும் என்று கேட்டு கடைக்கு சென்று உள்ளார்கள். உடனே கடை உரிமையாளர் கையில் இருந்த 2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு பெற்றுக்கொண்டு நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார்.

உடனடியாக அந்த பெண்கள் சில்லறை வாங்கிக் கொண்டு அதில் இருந்து 500 ரூபாயை எடுத்துக்கொண்டு சில்லறை வேண்டாம் என்று கூறி மீண்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கேட்டுள்ளார்கள். 500 ரூபாய் எடுத்ததை கவனிக்காத கடையின் உரிமையாளர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ரூபாயை தனது கல்லாவில் போட்டுவிட்டு 2000 ரூபாயை மீண்டும் நரிக்குறவ பெண்களிடம் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட 2 பெண்கள் மீண்டும் தனக்கு 100 ரூபாயாக ஆயிரம் ரூபாயாகவும், இரண்டு 500 ரூபாய் நோட்டுக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு கடைக்காரர் மீண்டும் 2 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாயாகவும், இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்ட பெண்கள் மீண்டும் சிறிது நேரம் கழித்து சில்லறை வேண்டாம் என்று கூறி 100 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் கொடுத்துவிட்டு 2000 ரூபாயை பெற்றுக்கொண்டார்கள் சிறிது நேரம் கழித்து தான் தன்னிடம் இருந்து 1,500 ரூபாய் பறி போனது தெரியவந்தது. உடனடியாக கடையை விட்டு வெளியே சென்ற நரிக்குறவ பெண்களை பிடித்து அவரிடம் இருந்து 1,500 ரூபாயை பெற்றுக்கொண்டு அவர்களை கண்டித்து அனுப்பினார். சில்லறை வாங்குவது போல் நடித்து 1500 ரூபாய் கையாடல் செய்தது துறையூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.