திருச்சியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது!

0 807
Stalin trichy visit

திருச்சி உறையூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அப்பகுதியில் உள்ள தேவர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் ஏராளமானோர் வந்து செல்வதாகவும், சந்தேகமாக உள்ளதாகவும் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் தேவர் காலனியில் உள்ள சம்பூரண இல்லத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது இதையடுத்து அங்கிருந்த 4 இளம் பெண்களை மீட்ட போலீசார், அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் நகரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சையது முஸ்தாபா ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.