கறி கடை போடுவதில் தகராறு; கத்திக்குத்தால் பரபரப்பு

0 423
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்குறிச்சி ஊராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது48). இவர் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் சக்தி முருகன்(23). இந்நிலையில் ராஜசேகருக்கும், சக்திமுருகனுக்கும் கிழக்குறிச்சி கரையோரம் அருகில் கறி கடை போடுவதில் இட தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று சக்தி முருகன் தனது நண்பர்களான சந்தனராஜ், திருஞானம், சிலம்பரசன் ஆகியோருடன் மது அருந்திவிட்டு காய்கறி வாங்க வந்த ராஜசேகரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும்தகராறு கைகலப்பாகி தகராறான நிலையில் சக்தி முருகன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரின் வயிறு மற்றும் காது பகுதியில் குத்தியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த ராஜசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்ததுடன்,வழக்குப்பதிவு செய்து சக்தி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று முசிறி கிளைசிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.