திருச்சி அரசு மருத்துவமனைக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன: மருத்துவமனை டீன் தகவல்

0 199
Stalin trichy visit

திருச்சி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 100 ஆக்ஸிஜன்செறிவூட்டிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் மேலும் 100 நோயாளிகள் பயனடைவார்கள்.திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில்இன்று காலை ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.இந்த நிலையில் மேலும் 100 ஆக்ஸிஜன்செறிவூட்டிகள் நோயாளிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் 1569 நபர்களுக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டது.நேற்று மட்டும் 10 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை337 ஆக அதிகரித்துள்ளது.தொற்றால் பாதிக்கப்பட்ட7482பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 509 சாதாரண படுக்கையும், 275 ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கையும் 60 வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை என மொத்தம் 844 படுக்கைகள் உள்ள நிலையில் 30 சாதாரண படுக்கைகள் தவிர மீதம் உள்ள 814 படுக்கைகள் நிரம்பி விட்டது.இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துறையூர் பகுதியை சேர்ந்த இருவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்சிலேயே படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்றுவரை திருச்சி மாவட்டத்தில் படுக்கைகள் போதிய அளவில் இருந்த சூழலில் நேற்று மட்டும் 1569 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். நாம் உயிர் வாழ்வதற்கு நமது நுரையீரலில் இருந்து உடலின் பல் வேறு உயிரணுக்களுக்கு சீரான ஆக்சிஜன் வினியோகம் அவசியமான ஒன்றாகும்.தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ்நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி ஆக்சிஜன் அளவை குறைக்கும். இந்த தருணத்தில் ஆக்சிஜன் பயன்படுத்தி நோயாளியின் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.அதற்கு பயன்படும் இந்த கருவிதான்oxygen concentrator எனப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள்.நமது ரத்தத்தில் 94 சதவீதத்திற்கும் குறைந்தால் இந்த கருவியை பயன்படுத்த வேண்டும். இந்த கருவியானது தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கலாம் என்பது இதன் தனி சிறப்பு. நிமிடத்திற்கு அதிகபட்சமாக 5 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் இதனைப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆக்சிஜன் செறிவூட்டி குறித்து பேட்டி அளித்த மருத்துவமனை டீன் வனிதாஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 10 லிட்டர் மற்றும் 5 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு வகையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இன்று முதல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் ஆகும். இதன் மூலம் மேலும் 100 ஆக்ஸிஜன் படுக்கை கொண்ட வசதிகளை திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பெறுகிறது. ஏற்கனவே 335 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.