கந்தசஷ்டியையொட்டி கோவில்களில் திருக்கல்யாணம்

0 558
Stalin trichy visit

முருகப்பெருமானுக்கு நடத்தப்படும் விழாக்களில் முதன்மையானது கந்தசஷ்டி விழா மற்றும் அதனுடன் இணைந்த சூரசம்ஹாரம் ஆகும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை.

இதனால் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா பல கோவில்களில் நடைபெறவில்லை. அதே நேரம் கந்தசஷ்டி விழாவின் தொடர் நிகழ்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருச்சி சாத்தனூர் சாலை, சுப்பிரமணிய நகரில் உள்ள முருகன் கோவிலில் நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். இதுபோல் திருச்சி ஜங்ஷனில் உள்ள வழிவிடு வேல் முருகன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
மேலும் மலைக்கோட்டை அருகே உள்ள நாகநாதசுவாமி கோவிலில் கல்யாண பாலசுப்பிரமணியர் உள்பட திருச்சி மாநகரில் உறையூர், சுப்பிரமணியபுரம், சுந்தர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.