சிவன் கோவிலை திறக்க கோரி சிவனடியார்கள் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டம்!

0 575
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த கீழவயலூர் பகுதியில் உள்ள வேதபுரீஸ்வரர் சிவன் கோவிலுக்கு பல ஊர்கள் மற்றும் சிவனடியார்களின் நன்கொடையை மூலமாக 4 லட்சம் மதிப்பீட்டில் தங்குவதற்கு இடம் மற்றும் கோவிலுக்கு கூரை கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவ்வூரைச் சேர்ந்த சிலர் கோவிலுக்குள் கீழ்ஜாதி சமூகத்தினரை அனுமதிக்க மறுப்பதாகவும், கடந்த 8 தினங்களுக்கு முன்பாக கோவிலை மூடி உள்ளதாகவும், கோவிலுக்கு வரும் பாதையை அடைப்பதாகவும் குற்றம் சாட்டி 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இன்று ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவனடியார்கள் பாடலை பாடி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.